சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா திரைப்படம் சரியாக வசூல் செய்யவில்லை. படம் நஷ்டமடைந்து விட்டது. ரஜினியின் தூத்துக்குடி பயணமும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் நடந்து கொண்ட விதமும் காலா படத்தின் வெளியீட்டை பாதித்துவிட்டது. இதனால் நடிகர் தனுஷ் வருத்தத்தில் இருக்கிறார் என பல வதந்திகள் பரவி வந்தன.
தற்போது அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷ் அவரது வுண்டர்பார் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.
'காலா படம் குறித்து பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் முரண்பாடு உள்ளது. காலா படம் வுண்டர்பார் நிறுவனத்துக்கு லாபம் ஈட்டித் தந்த வெற்றியடைந்த படம்.
இதற்காக சூப்பர் ஸ்டாருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.