ETV Bharat / sitara

காதலில் சறுக்கி கம்யூனிசத்தால் எழுந்து நிற்கும் 'டியர் காம்ரேட்'! - டியர் காம்ரேட்

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. பெண்ணுக்கு ஆண் துணையாக இருப்பதைவிட, தோழனாக இருப்பதே சமூகத்தை செழுமைப்படுத்தும் என்பதை வலியுறுத்துகிறது இப்படம்.

dear comrade
author img

By

Published : Jul 29, 2019, 8:24 AM IST

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்

அறிமுக இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள படம் 'டியர் காம்ரேட்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

படத்தில் ஸ்ருதி ராமச்சந்திரன், ராவ் ரமேஷ், அனிஷா குருவில்லா, ரகு பாபு, சுகன்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை - ஜஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவு - சுஜித் சாரங். படத்தில் இடம்பெற்றுள்ள 'காம்ரேட் ஆந்தம்' பாடலை நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளார்.

டியர் காம்ரேட்
கிரிக்கெட் விளையாட சொல்லித் தரவா...

கதைச்சுருக்கம்

எதற்கெடுத்தாலும் கோபம், அடிதடி, தட்டிகேட்டல் என கும்பலாக இறங்கி அடிக்கும் கல்லூரி மாணவன் காம்ரேட் சைதன்யா (எ) பாபி (விஜய் தேவரகொண்டா). தனது பக்கத்து வீட்டு விசேஷத்துக்கு வரும் அபர்ணா தேவி (எ) லில்லிக்கும் (ராஷ்மிகா மந்தானா) பாபிக்கும் முதலில் சின்ன மோதல், பிறகு அதுவே காதலாக மலர்கிறது.

அதீத கோபமும், ஆக்ரோஷமும் இவர்கள் காதலுக்கு இடையூறாக இருக்க, ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பின் கோபம் அடங்கி, பொறுப்பான சவுண்ட் தெரபி புராஜெக்ட் செய்யும் இளைஞராக திரும்பிவரும் காம்ரேட் பாபிக்கு, காதலி லில்லியை யதார்த்தமாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கண்டு துவண்டுபோகிறார்.

என்ன ஆனது லில்லிக்கு? அவருக்காக, உண்மையான காம்ரேட்-ஆக மாறி பாபி எடுக்கும் விஸ்வரூபமே 'டியர் காம்ரேட்.'

டியர் காம்ரேட்
ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா ஜாலி ரெய்டு

ப்ளஸ்

துடிப்பான கல்லூரி மாணவனாக ஹீரோயினை துரத்தி காதலிப்பதில் பாபி நடத்தும் ஜாலி ரெய்டு அசத்துகிறது. அதிலும், எதற்கெடுத்தாலும் கோபத்தை வெளிப்படுத்துவதில் நம் நாடி நரம்பையும் துடிக்கவைக்கிறார். நேபாளி கண்கள், நீண்ட முகம், அழகான குடுமி சகிதமாக பக்கத்து வீட்டு பெண் சாயலில் மனதைத் தொடுகிறார் ராஷ்மிகா மந்தனா. ஆர்ப்பாட்டம் இல்லா நடிப்பு, காதல், காதலனின் கோபம் கண்டு பயம், தனக்கு நேர்ந்த நிலை கண்டு உருக்கம் என அத்தனை விதமான உணர்வுகளையும் அசால்ட்டாக வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் காட்சிகள் தமிழில் டப் செய்யப்பட்டிருந்தாலும், அந்த உணர்வை ஏற்படுத்தாத விதமாக பார்த்துக்கொள்கிறது ஜஸ்டின் பிராபாகரின் பின்னணி இசை. 'புலராத' , 'ஆகாச வீடு' பாடல்கள் நம் மனதை விட்டு அகல மறுக்கின்றன.

'கீத கோவிந்தம்' என்னும் படம் மூலம் பிளாக் பஸ்டர் ஜோடியாக தெரிந்தவர்கள் இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான காதலர்களாக தெரிய வேண்டும்; ஆனால் மிஸ்ஸிங்.

டியர் காம்ரேட் ராஷ்மிகா மந்தனா டப்பிங் படமா இது எனக் கேட்க தோன்றுகிறது. அதற்கு மழைச்சாரல்களை மிகத் துல்லியமாக படம் பிடித்துள்ள சுஜித் சாரங்-இன் கேமரா, ஸ்லோ மோஷன், காதல் காட்சிகளில் அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இரு வேறு காலங்களில் பயணிக்கும் கதைக்கு ஏற்ப லைட்டிங் டோன்களில் வித்தயாசத்தை காட்டியிருப்பது மிக அருமை.

காதல் கதை என்றாலும் சின்ன சமூக சிந்தனை, போராட்டம் எனக் படத்தை கொண்டுசென்றிருப்பது பாராட்டும் விதமாக அமைந்துள்ளது.

டியர் காம்ரேட்
ராஷ்மிகா மந்தனா

மைனஸ்

பார்த்துப் பழகிய காதல் காட்சிகள் ஒரு புறம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என படத்தின் நீளம் டூ மச். டப்பிங் என்பதால் ஒரு சில காட்சிகள் மனதை ஒட்ட மறுக்கின்றன.

டியர் காம்ரேட்
'டியர் காம்ரேட்' விஜய் தேவரகொண்டா

'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி நிகழ்த்திய மேஜிக், டியர் காம்ரேட்-இல் மிஸ்ஸிங். கோபமான நாயகன் மென்மையான நாயகி என இந்திய சினிமாவில் பார்த்து பழகிய நாஸ்டால்ஜியா காதல் கதை.

டியர் காம்ரேட்
ஹீரோ என்ட்ரி

'டியர் காம்ரேட்' காதலில் சறுக்கி கம்யூனிசத்தால் எழுந்து நின்றிருக்கிறான்!

Intro:டியர் காம்ரேட் பட விமர்சனம்

Body:தயாரிப்பு - மைத்ரி மூவி மேக்கர்ஸ், பிக் பென் சினிமாஸ்
இயக்கம் - பரத் கம்மா
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா

கதை

எதற்கெடுத்தாலும் கோபம் ,அடிதடி, தட்டிகேட்பேன் என கும்பலாக இறங்கி அடிக்கும் கல்லூரி மாணவன் காம்ரேட் சைதன்யா (எ) பாபி (விஜய் தேவரகொண்டா), பக்கத்து வீட்டு விசேஷத்திற்கு வரும் அபர்ணா தேவி (எ) லில்லி (ராஷ்மிகா பந்தானா). இருவருக்கும் முதலில் சின்ன மோதல் பிறகு நினைத்தவாறே காதல். அதீத கோபமும் , ஆக்ரோஷமும் இவர்கள் காதலுக்கு இடையூறாக இருக்க பிரிகிறார்கள். மூன்று வருடங்கள் கோபம் அடங்கி, பொறுப்பான சவுண்ட் தெரபி pராஜெக்ட் செய்யும் இளைஞராக திரும்பி வரும் காம்ரேட் பாபிக்கு காதலியை எதார்த்தமாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் காதலியோ சற்றும் எதிர்பாரா நிலையில் பெண் வன்கொடுமை ஆளாகி மன அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு துவண்டு போகிறார் காம்ரேட் பாபி. என்ன ஆனது லில்லிக்கு? லில்லியின் நிலைக்கு நிலை யார் காரணம்? என உண்மையான காம்ரேட் ஆக மாறி உலகத்துடன் அவரை போராட அழைப்பதே மீதிக்கதை.

விஜய் தேவரகொண்டா நடிப்பெல்லாம் அல்வா ரகம் என பலரும் கூறுவது சரிதான். நாயகியைக் கூட பார்க்க விடாமல் அசத்துகிறார். அதிலும் கோபமான ஹீரோவாக நடிப்பில் விளையாடுகிறார்

ராஷ்மிகா பந்தானா நேபாளி கண்கள் , நீண்ட முகம் , குட்டி குடுமி சகிதமாக பக்கத்து வீட்டு பொண் சாயலில் மனதைத் தொடுகிறார். ஆர்ப்பாட்டம் இல்லா நடிப்பு, காதல், காதலனின் கோபம் கண்டு பயம், தனக்கு நேர்ந்த நிலை கண்டு உருக்கம் , என அத்தனையும் அசால்டாக நடித்துள்ளார் . ஆனால் இருவருமே 'கீத கோவிந்தம்' என்னும் படம் மூலம் பிளாக் பஸ்டர் ஜோடியாக தெரிந்தவர்கள் இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான காதலர்களாக தெரிய வேண்டும் ஆனால் மிஸ்ஸிங்.

பிரிந்த காதலர்கள் மூன்று வருடங்கள் கழித்து பார்க்கும் இடமும் ,தவிப்பும் பார்வையாளர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதீத வன்முறை ரத்தம் என சலிப்பூட்டாமல் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பரத் கம்மா

டப்பிங் படமா இது எனக் கேட்க தோன்றுகிறது. அதற்கு மிகப்பெரிய பலமாக நிற்கிறது ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் மற்றும்
பின்னணி இசையிலும் மனதைக் கவர்கிறார் 'புலராத' , 'ஆகாச வீடு' பாடல்கள் மனதை விட்டு அகல மறுக்கின்றன.

பாடல்களுக்கு ஏற்ப மழைச்சாரல், ஸ்லோ மோஷன் , காதல் என கலக்கல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுஜித் சராங்.காதல் காட்சிக்கும் காம்ரேட் சண்டைகளுக்கும் இடையேயான வித்யாச லைட்டிங் டோன்கள் அருமை.

பார்த்துப் பழகிய காதல் கதை அதில் சின்ன சமூக சிந்தனை , போராட்டம் எனக் கொண்டு சென்றமைக்கு பாராட்டுகள். எனினும் படத்தின் நீளம் டூ மச். கோபமான நாயகன் மென்மையான நாயகி இந்திய சினிமாவின் நாஸ்டால்ஜியா காதல் கதை.

Conclusion:'டியர் காம்ரேட்' காதலில் சறுக்கி கம்யூனிசத்தால் எழுந்து நின்றிருக்கிறான்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.