ETV Bharat / sitara

மாநாடு BGM - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம்

author img

By

Published : Dec 2, 2021, 7:07 AM IST

மாநாடு திரைப்படம் வெற்றியடைந்த நிலையில். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

yuvan shankar raja
yuvan shankar raja

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ஒன்று. மாநாடு வெற்றியடைந்தது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறைவனின் கருனைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும். வெங்கட் பிரபு, சிம்பு ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன.

ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை. இருப்பினும் இசை ஆர்வலர்கள், ரசிகர்கள் BGM- யில் எனது புதிய முயற்சிகளை கூர்மையாகக் கவனித்து, அவற்றை பாராட்டியது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்பு ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் சிம்பு இத்திரைப்படத்திற்காகத் தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்.

அவரது உழைப்பிற்கும், முயற்சிக்கும் அனைத்து தரப்பிலுமிருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன். எஸ்.ஜே.சூர்யா தனது முழு நடிப்பு ஆற்றலையும் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார்.

யுவன் வெளியிட்ட பதிவு
யுவன் வெளியிட்ட பதிவு

மாநாடு சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை குறித்தும், படம் குறித்தும் நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

'நீங்கள் உண்மையாகத் தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும்' என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. மாநாடு திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும், பாராட்டுக்களும் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாநாடு - 2 வெளியாவது உறுதி? - மனம்திறந்த வெங்கட் பிரபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.