ETV Bharat / sitara

நினைவில் சேர்ந்திருப்போம்... யுவனும் முத்துவும் இசையின் நட்பு! #HBDyuvan

author img

By

Published : Aug 30, 2019, 7:51 PM IST

Updated : Aug 31, 2019, 11:44 AM IST

காதல் கொண்டேனை முடித்துவிட்டு, 7ஜி ரெயின்போ காலனிக்குள் இவர்கள் இருவரும் நுழைந்தபோது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. யாரையும் இவர்கள் ஏமாற்றவில்லை. மாறாக, தன் இசையின் தளத்தை யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்தில் மாற்றி வைத்தார்

முத்துக்குமார்

”தூரத்தினால் பிரிந்திருந்தும், நினைவில் சேர்ந்திருப்போம்” யுவன் ஷங்கர் ராஜா தன் ரசிகர்களுக்காக பாடுவதுபோல் நா. முத்துக்குமார் எழுதிய வரிகள் இது. அவர் ரசிகர்களுக்காக எழுதினாலும் அந்த வரி யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், முத்துக்குமாருக்கும் பொருந்திப் போவது ஆச்சரியம். யுவன் ஷங்கர் ராஜா இதுவரை 130 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். அதில் தரமணி திரைப்படம்வரை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த 78 படங்களுக்கு முழு பாடல்களை முத்துக்குமார் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ யுவனின் கேரியரில் வந்த பாடல்களை பாதியை ஆக்கிரமித்திருக்கிறார் முத்துக்குமார். ஆக்கிரமித்தார் என்பதைவிட யுவன் அதற்கான இடம் கொடுத்தார் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இது சாதாரண விஷயமில்லை.

இருவரும், நந்தா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ”ஓராயிரம் யானை கொன்றால் பரணி” என்ற பாடல் மூலம் இணைந்தனர். அதன்பிறகு அவர்கள் தமிழ் திரையுலகுக்கு கொடுத்த பாடல்களெல்லாம் வேறு தளத்தில் இருந்தன.

யுவன் முத்து
யுவன் முத்து

காதல் கொண்டேன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களிலும் இருவரும் சேர்ந்து மேஜிக் செய்திருந்தாலும், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பாடல்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை முத்துக்குமாரின் வரிகளை வேறு இடத்திற்கு அழைத்து சென்றிருக்கும். குறிப்பாக தேவதையைக் கண்டேன் பாடலை புல்லாங்குழலின் இசை மூலம் ஆரம்பித்திருப்பார். இதுபோல் யுவனும், முத்துக்குமாரும் சேர்ந்த பாடல்களின் ஆரம்ப இசையும், ஆரம்ப வரியும் நம்மை அதற்குள் அழைத்து சென்றுவிடும்.

இசையமைப்பாளர் என்ற மிடுக்கோ, கவிஞர் என்ற கர்வமோ யுவனிடமும், முத்துக்குமாரிடமும் தென்பட்டதே இல்லை. இருவரும் எவ்வளவு எளிமையாக இருக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக இருந்தார்கள். அதனால்தான் அவர்களது பாடல்கள் எந்தவித அலங்காரமுமின்றி நம் அன்றாட நாட்களை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.

யுவன்
யுவன்

காதல் கொண்டேனை முடித்துவிட்டு, 7ஜி ரெயின்போ காலனிக்குள் இவர்கள் இருவரும் நுழைந்தபோது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. யாரையும் இவர்கள் ஏமாற்றவில்லை. மாறாக, இசையின் தளத்தை யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்தில் மாற்றி வைத்தார். பொதுவாக ஒரு இசையமைப்பாளரும், கவிஞரும் சேர்ந்து இரண்டு படங்களுக்கு மேல் பணிபுரிந்தாலே ஏதோ ஒரு உரசல் வரும். எம்.எஸ்.வி - கண்ணதாசன், இளையராஜா - வைரமுத்து என்று அந்த பட்டியல் செல்லும். ஆனால், யுவனும், முத்துக்குமாரும் பல படங்கள் ஒன்றாகப் பணிபுரிந்து, பல வருடங்கள் ஒன்றாகப் பயணித்தவர்கள். இருப்பினும் இவர்கள் இருவருக்கிடையே எந்தவித கருத்து வேறுபாடும் வந்தது கிடையாது. இது எப்படி சாத்தியம் என்ற ஆச்சரியம் படைப்பாளிகள் மத்தியில் இன்றளவும் இருக்கிறது. அதற்கு ஒரே காரணம், யுவன் - முத்துக்குமார் இருவரும் தங்களுக்குள் ஈகோ என்ற வார்த்தையை நுழையவிட்டதே கிடையாது.

யுவன்
யுவன்

புதுப்பேட்டை திரைப்படத்தில் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு வேலை செய்திருப்பார்கள். முக்கியமாக, ”ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது” பாடலில் முத்துக்குமார் வரிகளில் பின்னியெடுக்க யுவன் தனது ட்யூனையும், இடையிசையையும் வைத்து போட்டிபோட்டிருப்பார். அந்த பாடலின் வெற்றிக்குக் காரணம் முத்துவின் வரிகளா இல்லை யுவனின் இசையா என்று கேட்டால் இரண்டும்தான் என்பது நிதர்சனம். இருவருக்குமிடையே போட்டி இருந்ததே ஒழியப் பொறாமை அறவே இல்லை.

பொதுவாக இருவர் சேர்ந்து ஒன்றைப் படைக்கும்போது அந்த படைப்புக்கான அங்கீகாரம் ஒருவருக்கு மட்டும் சென்றால் மற்றொருவரின் மனம் சஞ்சலப்படும். இது மனித மனத்தின் நியதி. ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கான தேசிய கீதமான, “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலை படைத்தார்கள். இந்த பாடலுக்கு யுவனுக்கும், முத்துக்குமாருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நா. முத்துக்குமாருக்கு மட்டும் தேசிய விருது கிடைத்தது. இச்சூழலில் வேறு யாராவது இருந்திருந்தால் தன் மனதிற்குள் சஞ்சலத்தை நுழையவிட்டு கூட்டணியை உடைத்திருப்பார்கள். அதுமட்டுமின்றி, யுவனுக்கு அந்த பாடலுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்காதது குறித்து ஒட்டுமொத்த இசைப் பிரியர்களும் தங்களது ஆதங்கத்தைக் கொட்டினர். ஆனால் யுவனோ, ”தன் கடன் பணி செய்து கிடப்பதே” என்று இருந்தார்.

யுவன்
யுவன்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முதல் மரியாதை திரைப்படத்தின் பூங்காத்து திரும்புமா என்ற பாடலுக்கு வைரமுத்துவுக்கு மட்டும் தேசிய விருது கிடைத்தது. ஆனால் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை. இதனால்தான் அந்த கூட்டணி உடைந்தது என்ற தகவல் அந்தக் காலகட்டத்தில் மட்டுமில்லை இந்த காலகட்டத்திலும் பரவிவருகிறது. ஆனால், ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கு முத்துவுக்கு தேசிய விருது கிடைத்தாலும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு என்று ஒரு தகவலைக்கூட யாராலும் கசியவிடமுடியவில்லை. அந்தளவுக்கு அவர்களது நட்பு பலமாக இருந்தது.

முத்துக்குமார் யுவன்
முத்துக்குமார் யுவன்

இருவரும் இணைந்து ஏகப்பட்ட பாடல்கள் கொடுத்திருந்தாலும், அனைத்து காதலர்களுக்கும் இன்றுவரை நெஞ்சோடு கலந்திருப்பது; கற்றது தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடல், ஏற்கனவே அவர்கள் அந்த பாடலில் போட்டிப்போட்டிருப்பார்கள் இதில் மற்றொரு பந்தயக் குதிரையாக இளையராஜா வந்து இணைந்து கொண்டார். இன்றுவரை தமிழ் இசைப்பாடல்களில் சிறந்த பாடல், இந்த பாடல் குரலால் உயர்ந்ததா, வரிகளால் உயர்ந்ததா, மெட்டால் உயர்ந்ததா என்று கேள்விகளுக்கு பதில் கிடைக்காததும் இந்த பாடல்தான். ஆனால் இந்த பாடலில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபாரமானது.

யுவன்
யுவன்

தேவதையைக் கண்டேன் பாடலை புல்லாங்குழலை வைத்து ஆரம்பித்திருந்த யுவன், இந்த பாடலை ஒரு பெண்ணின் ஹம்மிங்கை வைத்து ஆரம்பித்து நேரடியாக இளையராஜாவின் குரலை அறிமுகப்படுத்திவிடுவார். அவரின் இந்த ஸ்டைல்தான் இந்த பாடலை இன்றுவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ஏனெனில் இளையராஜாவின் குரலில் ஒரு கம்பீரம் கலந்த சோகமும், ஏக்கமும் இருக்கும். அதை சரியாகப் பிடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர் யுவன்.

குறிப்பாக அந்த பாடலில், 3.28லிருந்து 4.28 நிமிடம் வரை யுவன் ஷங்கர் ராஜா செய்தது மேஜிக்கின் உச்சம். ஏனெனில், ”முதல்முறை கனவு பலிக்குதே அன்பே” என்று முதல் சரணத்தை முடித்துவிட்டு அதுவரை இசையால் கனத்துக் கிடந்த நெஞ்சில், அடுத்த நொடியிலிருந்து 3.41வரை 12 நொடிகளில் (கிடாரோ, கீ போர்டோ எந்த கருவி என்று அவருக்கு மட்டுமே தெரியும்) வரும் அந்த இசைத் துணுக்கு மூலம் சிறிது தூறலை தூவியிருப்பார்.

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

அதையடுத்து, 3.42லிருந்து ”ஏழை காதல்” என்ற இரண்டாம் சரணத்தில் ஆரம்பித்து 4.29ஆவது நிமிடத்தில் ”இந்த நொடியில் என்றும் வாழ்வேன்” என அதனை முடித்திருப்பார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரண்டாவது சரணத்தின் ட்யூன் ஒரே மீட்டரில் செல்லாமல் ஏற்ற இறக்கங்களோடு சென்றிருக்கும். இந்த ஒரு போர்ஷனுக்காகவே யுவனுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை.

இதே கூட்டணி சத்தம் போடாதே திரைப்படத்தில், பேசுகிறேன் பேசுகிறேன் என்று பெண்களுக்கான தன்னம்பிக்கை பாடலை கொடுத்திருக்கும். இந்த பாடலிலும், 2.30ஆவது நிமிடத்திலிருந்து 3.30ஆம் நிமிடம் வரை ஒரு இசைத் துணுக்கு வரும். பொதுவாக ஒரு கருவியை வைத்து ஒரு நிமிட இசைத் துணுக்கை ரசிகனுக்கு சலிப்பு தட்டாமல் கொடுப்பதே சவாலான காரியம். ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவோ, இந்த பாடலில் 2.30ஆவது நிமிடத்தில் சாக்ஸஃபோன் கருவியில் ஆரம்பித்து 3.30ஆம் நிமிடத்தில் கிடாரில் முடித்திருப்பார். அதிலும், அந்த கிடார் இசைத் துணுக்கு வேறு வேறு தளங்களில் பயணிக்கும். யுவன் ஷங்கர் ராஜா ஒரு பாடலில் பலவித இசையை ஏராளமான பாடல்களில் கொடுத்துள்ளார். இதை நாம் உணரவேண்டுமென்றால் அவரது ஒவ்வொரு பாடலையும் பிரித்து பிரித்து கேட்க வேண்டும். அப்படி கேட்டால் யுவன் ஷங்கர் ராஜா என்ற இசை ஆளுமை மேலும் உங்களுக்கு நெருக்கமாவார்.

முத்துக்குமார் யுவன்
முத்துக்குமார் யுவன்

அனைத்து துறைகளிலும், ஒரு கூட்டணியின் வெற்றிடம் எப்போதும் அப்படியே இருக்கும். இப்போது செல்வராகவன், ராம் போன்ற இயக்குநர்கள் யுவனின் இசையில் வேறு ஒரு பாடலாசிரியரை எழுத வைத்தாலும், அவர்கள் மிஸ் செய்துகொண்டிருப்பது யுவன் - நா. முத்துக்குமார் கூட்டணியைத்தான் என்பது அவர்களே ஒத்துக்கொண்ட உண்மை. இப்படி யுவன் - முத்துக்குமாரின் பாடல் கூட்டணியை பேசிக்கொண்டே செல்லலாம். அப்படி பேசினால் தமிழ்த் திரையிசையின் நான்கின் ஒரு பங்கைப் பேசவேண்டும்.

இளையராஜாவின் இளையராஜா
இளையராஜாவின் இளையராஜா

முத்துக்குமாரின் முதல் விமான பயணம் யுவன் ஷங்கர் ராஜாவுடன், முத்துக்குமாரின் முதல் தேசிய விருது யுவனின் இசையில், முத்துக்குமார் எளிமைக் கவிஞர், ஜென் கவிஞர் என்று முதன்முதலில் பெயர் எடுத்தது யுவனின் இசையில். இப்படி பல முத்துக்குமாரின் பல முதன்முதல்களுக்கு யுவனின் இசை முதலீடு செய்யப்பட்டிருக்கும்.

நா. முத்துக்குமாரின் மறைவுக்கும், அவரது மறைவுக்கு பிறகும் யுவன் ஷங்கர் ராஜா பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்ற கூற்று பலரால் கூறப்படுகிறது. ஆனால், ”தூரத்தினால் பிரிந்திருந்தும், நினைவில் சேர்ந்திருப்போம்” என்று முத்துக்குமார் எழுதியது போல் யுவனின் நினைவில் முத்துக்குமார் என்றுமே சேர்ந்திருப்பார். ஏனெனில் அவர்கள் இசையின் நட்பு. பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்...

Intro:Body:Conclusion:
Last Updated : Aug 31, 2019, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.