தற்போது அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஆடிசன் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த ஆடிசனில் 'ப்ளாக் ஷீப், புட் சட்னி, நக்கலைட்ஸ், பரிதாபங்கள், ஃபன் பண்றோம், எரும சாணி' உள்ளிட்ட பிரபல யூ ட்யூப் சேனல் நட்சத்திரங்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. யூ ட்யூப் பிரபலங்கள் பலரும் தற்போது திரைத்துறைக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களின் பெர்ஃபார்மன்ஸும் பாராட்டும்படி உள்ளது. எனவே விஜய்யுடன் சில யூ ட்யூப் பிரபலங்கள் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது.
இதுவரை யாரும் பார்க்காத விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கலாம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.