ETV Bharat / sitara

முருகன் அவதாரம் எடுத்த யோகிபாபுவின் 'காக்டெய்ல்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - காக்டெய்ல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

யோகிபாபு நடிப்பில் ஆர்.ஏ. விஜய முருகன் இயக்கும் 'காக்டெய்ல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Yogibabu
Yogibabu
author img

By

Published : Feb 3, 2020, 12:01 PM IST

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆர்.ஏ. விஜய முருகன் இயக்கும் புதிய படம் 'காக்டெய்ல்'. பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்தும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்கிறார்.

இந்த வித்தியாசமான படத்தில் யோகிபாபு உடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'காக்டெயில்' என்கிற பறவையும் படம் முழுக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் யோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொள்கிறார்கள்.

கொலைசெய்யப்பட்ட நபர் யார்? அந்தக் கொலையை செய்தது யார்? இதிலிருந்து மீண்டு யோகிபாபு எப்படி வெளியே வருகிறார். இதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை.

Cocktail
காக்டெய்ல் பறவையுடன் யோகிபாபு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், படத்தின் பறவையின் லுக் படத்தை ஏற்கனவே வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது யோகிபாபுவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், முருகக் கடவுளின் அவதாரத்தில் பின்புறம் காக்டெய்ல் பறவை இடம்பெற்றிருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Cocktail
'காக்டெய்ல்' ஃபர்ஸ்ட் லுக்

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரின் உதவியாளர் சாய் பாஸ்கர் இசையமைக்கிறார். ஆர்.ஜே. ரவீன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க...

பரதநாட்டியம் ஆடி அசத்தும் 'தலைவி' கங்கனா - புகைப்படம் வெளியிட்ட ரங்கோலி

Intro:Body:

#Cocktail First Look @iYogiBabu pic.twitter.com/kQGfmITGtC
— PremKumar PRO (@PremKumarOffl) February 3, 2020

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.