அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் 'மண்டேலா'. இயக்குநர் பாலாஜி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ஓபன் விண்டோ புரொடக்ஷன் இப்படத்தைத் தயாரித்துள்ளது. படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மண்டேலா படத்தில் யோகிபாபுவுடன் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியிலும், அதனைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
-
Thkyuo gautham menon sir pic.twitter.com/rgoYyfajMo
— Yogi Babu (@iYogiBabu) June 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thkyuo gautham menon sir pic.twitter.com/rgoYyfajMo
— Yogi Babu (@iYogiBabu) June 9, 2021Thkyuo gautham menon sir pic.twitter.com/rgoYyfajMo
— Yogi Babu (@iYogiBabu) June 9, 2021
இந்த நிலையில், மண்டேலா படத்தைப் பார்த்த இயக்குநர் கெளதம் மேனன், ”மண்டேலா ஒரு சிறந்த காமெடி படம். யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு யோகிபாபு, ”நன்றி கெளதம் மேனன் சார்” என ட்விட்டர் வாயிலாக பதில் அளித்துள்ளார்.
தற்போது உள்ள தமிழ் சினிமாவில் யோகிபாபு பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் பணியாற்றி வந்தாலும் கெளதம் மேனனுடன் இதுவரை பணியாற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.