தமிழ் சினிமாவில் தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் யோகி பாபு. அவரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த யோகி பாபு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்திலிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார்.
'கப்பல்' பட இயக்குநர் கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'டக்கர்'. இப்படத்தில் யோகிபாபு அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் தோன்றுகிறார். மேலும் இவர்களுடன் திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
-
#Takkar ☺️☺️@Actor_Siddharth @Karthik_G_Krish @itsdivyanshak @nivaskprasanna @RjVigneshkanth @editorgowtham @PassionStudios_ @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/05UBYcVWQC
— Yogi Babu (@iYogiBabu) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Takkar ☺️☺️@Actor_Siddharth @Karthik_G_Krish @itsdivyanshak @nivaskprasanna @RjVigneshkanth @editorgowtham @PassionStudios_ @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/05UBYcVWQC
— Yogi Babu (@iYogiBabu) January 22, 2020#Takkar ☺️☺️@Actor_Siddharth @Karthik_G_Krish @itsdivyanshak @nivaskprasanna @RjVigneshkanth @editorgowtham @PassionStudios_ @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/05UBYcVWQC
— Yogi Babu (@iYogiBabu) January 22, 2020
இதனையடுத்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்த்த யோகிபாபுவின் இரட்டை வேட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்லாது திரை பிரபலங்களும் அதிகமாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் தயாரிக்கிறார். பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: ‘விரைவில் திருமணம் செய்துகொள்வேன்’ - யோகிபாபு!