யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழு பழைய நினைவுகளை மீண்டும் நினைவுகூறும் வகையில் த்ரோபேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். யுனைட்டட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அறுபதாம் ஆண்டு கொண்டாட்ட வீடியோ அது.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் 2012ஆம் ஆண்டு ஒய் ஜி மகேந்திரனின் நாடகக் குழுவைப் பாராட்டி பேசியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஒய். ஜி. மகேந்திரன் கூறுகையில், 'யுனைட்டட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழு தென்னிந்தியாவிலேயே தொடர்ந்து 68 ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை போட்டுக் கொண்டிருக்கும் ஒரே நாடக கம்பெனி. இந்த நாடகக் குழு கடந்த 2012ஆம் ஆண்டில் 60ஆவது நிறைவு ஆண்டைக் கொண்டாடியபோது எங்களோடு பயணித்த, பங்குபெற்ற கலைஞர்கள் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தேவா, நடிகை லக்ஷ்மி, இவர்கள் மட்டுமல்லாமல் நம்மோடு வாழ்ந்து மறைந்த கலைஞர்கள் கே. பாலச்சந்தர், நாகேஷ், சோ, விசு, கிரேசி மோகன் என பல கலைஞர்கள் எங்கள் குழுவைப் பாராட்டி, எங்கள் நாடகங்கள் குறித்தும் பாராட்டிப் பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த நாடகக்குழு 68ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதன் கலைப்பயணம் மேலும் தொடரும்' என்றார்.
இதையும் படிங்க... ஊரடங்கால் நலிவுற்ற நாடகக் கலைஞர்கள்-அரவணைக்குமா அரசு?