தற்போது ரஜினியின் 168ஆவது திரைப்படமான 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் நிலையில் பிரபல எழுத்தாளரான வேல ராமமூர்த்தி படக்குழுவில் இணைந்துள்ளார். 'குற்றப் பரம்பரை', 'பட்டத்து யானை' போன்ற நூல்களை எழுதியுள்ள இவர், 'மதயானைக் கூட்டம்', 'சேதுபதி' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அண்ணாத்த’ ஆடுறார் ஒத்திக்கோ - தலைவர் 168 டைட்டில் வெளியானது