ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள அபுதாபியில் உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபா உள்ளது.
2,684 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டடத்தில் 160 மாடிகள் அமைந்துள்ளன. இந்த கட்டடம் முழுவதும் பிரத்யேக கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டது.
புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் இரவு நேரங்களில் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்படும் காட்சி கண்போரை வியக்க வைக்கும்.
ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை மையமாக வைத்து 'நவரசா' என்னும் ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளனர்.
-
Ithu summa trailer tha pa. Main picture nalaiku paapom. #NavarasaOnNetflix pic.twitter.com/mAhZK4YaEp
— Netflix India South (@Netflix_INSouth) August 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ithu summa trailer tha pa. Main picture nalaiku paapom. #NavarasaOnNetflix pic.twitter.com/mAhZK4YaEp
— Netflix India South (@Netflix_INSouth) August 5, 2021Ithu summa trailer tha pa. Main picture nalaiku paapom. #NavarasaOnNetflix pic.twitter.com/mAhZK4YaEp
— Netflix India South (@Netflix_INSouth) August 5, 2021
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை மணிரத்னம், ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கரோனா பொது முடக்கம் காரணமாகத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.
கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 9 குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 'நவரசா' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் எல்.இ.டி விளக்குகளால் கட்டடம் ஒளிர செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'நவரசா' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த மணிரத்னம்!