ஹாலிவுட்டில் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், தோர், அயர்ன்மேன் எனப் பல ஆண் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு பெண் சூப்பர் ஹீரோவை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு வெளியாகி, பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ’வொண்டர் வுமன்’.
2017ஆம் ஆண்டு கேல் கடோட் நடிப்பில் ரிலீஸான வொண்டர் வுமன் திரைப்படத்தின் முதல் பாகம், வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண் சூப்பர் ஹீரோக்களின் வரிசையில் வெளியாகி ஹிட்டான முதல் திரைப்படம் இதுவாகும்.
- — Gal Gadot (@GalGadot) November 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Gal Gadot (@GalGadot) November 19, 2020
">— Gal Gadot (@GalGadot) November 19, 2020
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ’வொண்டர் வுமன் 1984' என்ற பெயரில் உருவாகி, ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. அதன்படி கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. பட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இப்படம் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்தத் திரைப்படம் திரையரங்குகள், ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்தில் ஒரே நாளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் பட்டி ஜென்கின்ஸ், "ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தாண்டி நம்மிடம் இருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர நாம் முடிவெடுக்க வேண்டும். எங்கள் ரசிகர்களைப் போலவே எங்கள் திரைப்படத்தையும் நாங்கள் விரும்புகிறோம். அது இந்த விடுமுறைக் காலத்தில் உங்களுக்கு சிறு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
'டெனட்' திரைப்படத்துக்கு திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் வார்னர் பிரதர்ஸ் 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தை இவ்வாறு வெளியிடுகின்றனர்.