பேட் மேன் vs சூப்பர் மேன், சூசைட் ஸ்குவாட் என டிசி காமிக்ஸின் திரைப்படங்கள் தொடர் தோல்வியடைந்து வந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் டிசி காமிக்ஸிற்கு மிகப் பெரிய ஒரு வெற்றி தேவைப்பட்டது.
அப்போது வெளியான திரைப்படம்தான் கேல் கடோட்டின் வொண்டர் வுமன். பெண் சூப்பர் ஹீரோ வரிசையில் வெளியாகி ஹிட்டான முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டளாமே உள்ளது.
'வொண்டர் வுமன்' ஹிட் ஆனதைத் தொடர்ந்து, அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'வொண்டர் வுமன் 1984' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் வெளியாகவிருந்த 'வொண்டர் வுமன் 1984', கரோனா பரவல் காரணமாக டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
ஆனால், திரையரங்குகளில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்வில்லை, இதன் காரணமாக ‘வொண்டர் வுமன் 1984’ திரைப்படம் ஓடிடி மற்றும் திரையங்குகளில் ஒரு நேரத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,சீனாவில் இத்திரைப்படம் சர்வதேச அளவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, அதாவது டிசம்பர் 18ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சீனாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு முக்கியப் பங்கு சீனாவில் இருந்து கிடைப்பவை. இதன் காரணமாகவே தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக 2017ஆம் ஆண்டு சீனாவில் வெளியான வொண்டர் வுமன் திரைப்படத்தின் முதல் பாகம் 90.5 மில்லியன் டாலர் வசூலித்திருந்தது.
இதையும் படிங்க: 1.5 மில்லியன் டாலருக்கு விற்பனையான முதல் பேட்மேன் காமிக்...!