ETV Bharat / sitara

மகிழ்ச்சியுடன் இருங்கள் பிரபாஸ் - தோழி அனுஷ்காவின் பிறந்தநாள் வாழ்த்து - பிரபாஸை வாழ்த்திய அனுஷ்கா

ஹைதராபாத்: பிரபாஸுக்கு நடிகை அனுஷ்கா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Anushka Shetty
Anushka Shetty
author img

By

Published : Oct 23, 2021, 1:02 PM IST

தென்னிந்திய நடிகர் பிரபாஸ் இன்று (அக்.23) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை அனுஷ்கா தனது சமூகவலைதளப்பக்கத்தில் பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கட்டும். உங்கள் கதைகள் உலகெங்கிலும் உள்ள பல இதயங்களை சென்றடையட்டும். மகிழ்சியுடனும் ஆரோக்கியமுடனும் இருக்க பிரபாஸுக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டார்.

பிரபாஸும் அனுஷ்காவும் திரையில் இணைந்து நடித்த 'பில்லா', 'மிர்ச்சி', 'பாகுபலி', 'பாகுபலி 2' போன்ற படங்கள் மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. 'மிர்ச்சி' படத்தில் அனுஷ்காவும் பிரபாஸும் இணைந்து நடித்த போது ஜோடி பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

பிரபாஸும் அனுஷ்காவும் திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் இணைந்து வாழ வேண்டும் எனக் கூறி அவர்களை சுற்றி நிறைய கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருப்பினும் இருவரும் உறுதியாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறியுள்ளனர்.

பிரபாஸ் தற்போது 'ராதே ஷ்யாம்', 'சலார்', 'ஆதிபுருஷ்', 'ஸ்பிரிட்', 'புரெஜக்ட் கே' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் 'ராதே ஷ்யாம்' திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இதையும் பாருங்க: 'பாகுபலி' உருவானது எப்படி? - காணாத புகைப்படங்கள் !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.