உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி மூன்றாவது படமாக நயன்தாரா நடிப்பில் இயக்கியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு பேசுகையில், இந்த படத்தின் மேல் இருக்கும் கவனம் நயன்தாராதான். ஆனால், அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. வேறு ஏதோ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு மதியழகன் அழைப்பு விடுத்தார் அதனால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். வந்த பின்புதான் தெரிந்தது சக்ரி டோலட்டி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்று. அவரும் வேறு வேலை இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்றார்கள். படத்தில் நடித்தவர்கள் இயக்கியவர்கள் யாரும் வராமல் ஒரு விழா நடக்கிறது.
'நயன்தாராவை அரசியலுக்கு கூப்பிடுவார்'...சுசீந்திரனை கலாய்த்த கரு.பழனியப்பன் - nayanthara
இயக்குநர் சுசீந்திரன் யாருக்கு கூட்டம் கூடினாலும் அவர்களை அரசியலுக்கு வர அழைப்பு விடுகிறார் எனவும் நயன்தாராவைப் பார்த்தால் அவரையும் அரசியலுக்கு அழைப்பார் என்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் கேலியாக தெரிவித்துள்ளார்.