இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'வாட்ச்மேன்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் புரூனோ என்ற நாய் படம் முழுக்க வந்து கலக்குகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வாட்ச்மேன் படக்குழு பொள்ளாச்சி நகருக்கு 50 சிசிடிவி கேமராகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் 50 சிசிடிவி கேமராக்களை நகர்பகுதியில் பெருத்தியதோடு அதை கண்காணிக்கும் பொறுப்பை அந்த அந்தபகுதியில் உள்ள காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது, பொள்ளாச்சி மட்டுமல்லாது மற்ற பகுதிகளிலும் இதே போல் குற்றங்கள் நடைபெறுகிறது . எனவே சமூக அக்கறை கொண்ட வசதி படைத்தவர்கள் அந்தந்த பகுதியில் இந்த மாதிரி சிசிடிவி கேமராக்களை நிறுவினால் குற்றம் புரிவோருக்கு ஒரு பயம் ஏற்படும். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துள்ளோம். என்று கூறினார்.
இவரைதொடர்ந்து கலப்பை மக்கள் இயக்கத்தலைவர் பி.டி .செல்வகுமார் பேசியதாவது, 'சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து நடிகர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த அவரவர் ரசிகர் மன்றம் மூலமாக சி சி டி வி கேமராக்களை நிறுவ வேண்டும்.காவல் துறையை மட்டும் நம்பாமல் நாமும் குற்றங்கள் குறைய செயல்படுவது நல்லது' என்றார்.