ETV Bharat / sitara

அப்பாவுக்கு விருது- நன்றி தெரிவித்த விவேக் மகள் - siima awards

நடிகர் விவேக்கிற்கு சைமா விருது வழங்கப்பட்டதற்கு அவரது மகள் நன்றி தெரிவித்துள்ளார்.

விவேக்
விவேக்
author img

By

Published : Sep 25, 2021, 1:25 PM IST

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வந்த விவேக், தனது நகைச்சுவை வழியாக சமூகத்திற்கு பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தார்.

கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக விவேக் காலமானார். அவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விவேக்கிற்குத் தாராள பிரபு படத்தில் நடித்ததற்காக சைமாவில் விருது வழங்கப்பட்டது. இதனை யோகி பாபு பெற்றுக் கொண்டு விவேக் வீட்டில் கொண்டு சேர்த்தார்.

விவேக் வெளியிட்ட பதிவு
விவேக் வெளியிட்ட பதிவு

இதற்கு நன்றி தெரிவித்து, விவேக்கின் மகள் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "என் தந்தைக்கு சைமாவில் விருது வழங்கியதற்கு மிக்க நன்றி. விருது வாங்கி, வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்ந்த யோகி பாபுவுக்கு நன்றி. தாராள பிரபு படக்குழு, ரசிகர்களுக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எஸ்பிபியின் நினைவு நாள்: பாடும் நிலா மறைந்து ஓராண்டு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.