ETV Bharat / sitara

ஓடிடி தளத்தில் வெளியாகும் வைபவ்வின் 'காட்டேரி'

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 18, 2020, 4:35 PM IST

காட்டேரி
காட்டேரி

வைபவ் நடிப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'சிக்சர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் டீ. கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படத்தில் வைபவ் தற்போது நடித்துள்ளார்.

காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வைபவுடன் இணைந்து இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், மணாலி ரத்தோர், ரவி மரியா, கருணாகரன், ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது, 'ஜீ5' நிறுவனத்தின் ஓ.டி.டி.-யில் 'காட்டேரி' படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.