சென்னையில் விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்.ஐ.ஆர். படத்தின் வெற்றி விழா இன்று (பிப்ரவரி 18) நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், ரைசா வில்சன், இயக்குநர் மனு ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது விஷ்ணு விஷால் பேசுகையில், "இத்திரைப்படம் ஃபேமிலி மேன், மாநாடு படத்தின் சாயலில் உள்ளதாக விமர்சனங்களில் குறிப்பிட்டிருந்தனர். இப்படத்தின் கதை கேட்கும்போது அந்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை. இந்தக் கதையை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டுவிட்டேன்.
ஃபேமிலி மேன் படத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தைக் கைவிட்டுவிடலாம் என்று நினைத்தோம். பின்னர் தமிழ் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. நான் எதிர்பார்த்ததைவிட இப்படத்தின் பட்ஜெட் அதிகரித்துவிட்டது. எனக்கு எவ்வளவு வியாபாரம் உள்ளது என்று எனக்குத் தெரியும்.
இது என்னுடைய மிகப்பெரிய படமாக வந்துவிட்டது. கரோனா காலத்தில் என்னிடம் பணமும் இல்லை. எனது தந்தை தனது ஓய்வூதியப் பணத்தைத் தருவதாகத் கூறினார். எப்படியோ என்னுடைய ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமை மிகப்பெரிய விலைக்கு விற்றதால் சமாளித்துவிட்டேன்" எனக் கூறி கண்கலங்கினார்.
இதையும் படிங்க: ஜெய் மீதான இமேஜை வீரபாண்டியபுரம் மாற்றும் - சுசீந்திரன்