ETV Bharat / sitara

'சினிமாவுக்குள் நுழைந்த பிறகுதான், மதுப்பழக்கத்திற்கு அடிமையானேன்' - விஷ்ணு விஷால் - vishnu vishal shares about six pack

நடிகர் விஷ்ணு விஷால் சினிமாவுக்குள் நுழைந்த பிறகு தான், தான் மதுப் பழக்கத்திற்கு அடிமையானேன் என்று கூறியுள்ளார்.

சினிமாவுக்குள் நுழைந்த பிறகு தான் மது பழக்கத்திற்கு அடிமையானேன்- விஷ்ணு விஷால்

author img

By

Published : Jan 23, 2020, 2:56 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. அதன் பிறகு அவரின் எந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்கிடையே விஷ்ணு விஷாலுக்கும், அவரது மனைவி ரஜினிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வருவதாகவும், அதனால் தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருவதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து சமீபத்தில் விஷ்ணு விஷால், தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை ட்விட்டரில், அறிக்கையுடன் வெளியிட்டிருந்தார். அதில் 'தான் மது, மன உளைச்சல் மற்றும் தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால், பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரித்து விட்டதாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துவிட்டதாகவும்' தெரிவித்தார்.

  • Not just that note, I thought it would be nice to share some moments from the training process with you all :)

    So here we go, presenting you THE TRANSFORMATION STORY OF MY BODY AND MIND 💪https://t.co/nxJqPuBSxQ

    — VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால், சிக்ஸ் பேக் வைத்ததற்கான காரணத்தை வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார். அதில், 'சினிமாவுக்கு வந்த பிறகு தான், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானேன் . மதுப்பழக்கத்திற்கு அடிமையானது எனக்கே பிடிக்கவில்லை. கடைசி இரண்டு மாதங்களில் நான் சுத்தமாக மது எடுத்துக் கொள்ளவில்லை. இதுவரை நான் செய்யாத ஒன்றை செய்து முடிக்கும் போது பாசிட்டிவான எண்ணங்கள் கிடைக்கின்றன. அதனால் தான் சிக்ஸ் பேக் வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: 'பெரியாரியவாதிகள் ஒரு சாதிக்கு தான் எதிரானவர்களாக இருக்கின்றனர்' - கஸ்தூரி ட்வீட்

Intro:Body:

https://www.sify.com/movies/vishnu-vishal-on-fighting-his-inner-demons-imagegallery-kollywood-ubxlqzbgjiaje.html

Vishnu Vishal on fighting his inner demons

Read more at: https://www.sify.com/movies/vishnu-vishal-on-fighting-his-inner-demons-imagegallery-kollywood-ubxlqzbgjiaje.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.