ETV Bharat / sitara

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண தேதி அறிவிப்பு - விஷ்ணு விஷால் திருமணம்

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Vishnu Vishal
Vishnu Vishal
author img

By

Published : Apr 13, 2021, 12:50 PM IST

'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் 'முண்டாசுபட்டி', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ஜீவா', 'ராட்சசன்', 'நேற்று இன்று நாளை' உள்ளிட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தார்.

இவர் 2011ஆம் ஆண்டு தனது கல்லூரித் தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்ற மகன் உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் அறிவித்தார்.

தொடர்ந்து, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வந்தார். இந்த நிலையில், விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டாவின் பிறந்தநாளான செப்டம்பர் 7ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்க்கையைத் தொடர திட்டமிட்டிருப்பதாக ட்வீட் செய்திருந்தார்.

மேலும், ஜூவாலா கட்டாவை வரும் ஏப்ரல் 22ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், தன் ரசிகர்கள் அனைவரின் அன்பும், வாழ்த்தும் வேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர் ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.