மனு ஆனந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஸ்வத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் எஃப்.ஐ.ஆர். திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீசாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
விஷ்ணு விஷால் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்தப் படம் அவருக்கு பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ‘ஜெகஜால கில்லாடி’, ‘இன்று நேற்று நாளை 2’, விக்ராந்தோடு சேர்ந்து ஒரு படம் என சில படங்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவருகிறது. இதேபோல் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவ்வுலகில் பேரன்பை விட எது பெரிதாக இருந்து விட முடியும்...!