விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படத்தின் இயக்கத்திற்குப் பிறகு ஆனந்த் ஷங்கர் தற்போது விஷால், ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் இன்று (அக்டோபர் 16) தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியான 'லென்ஸ்', 'வெள்ளை யானை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நாயகியாக மிருணாளினி நடிக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக ராஜசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'அவன் இவன்' படத்தைத் தொடர்ந்து விஷால் - ஆர்யா இருவரும் இணைந்து இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
'நோட்டா' இயக்குநருடன் விஷால் - ஆர்யா கூட்டணி! - இயக்குனர் ஆனந்த் ஷங்கரின் புதிய படம்
ஹைதராபாத்: விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.