நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 1ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக விஷால் 32 எனப் பெயரிடப்பட்டுள்ள இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கிவரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று (செப் 14) நிறைவடைந்துள்ளது. இந்த தகவலைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.