நடிகர் விஜய் ஜூன்-22ஆம் தேதி, 46ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார். இவரின் பிறந்த நாளை, அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆரவாரத்துடன் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் பல பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முன்னதாக நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா விஜயகுமார், கடந்த 1995ஆம் ஆண்டு விஜய் நடித்த 'சந்திரலேகா' படத்தின் மூலம், நாயகியாக தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து இவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு இல்லாததால், தனது 19ஆவது வயதில் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து, 2007ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.
இதனையடுத்து அதே ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து 2010ஆம் ஆண்டு மணமுறிவு ஏற்பட்டது.
வனிதாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும்; ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர். அதேபோல் இரண்டாவது திருமணத்தின் மூலம் ஜெயந்திகா என்ற மகளும் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தற்போது வனிதா ஜூன் 27ஆம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், தனது மகன் விஜய் ஸ்ரீஹரியின் பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார், வனிதா.
அந்த புகைப்படத்தில் விஜய் தனது மனைவியுடன், விஜய் ஸ்ரீஹரியின் பிறந்த நாளிற்கு வனிதாவின் வீட்டிற்குச் சென்று உள்ளார்.
விஜய் ஸ்ரீஹரியை தனது மடியின் மீது அமர்த்தி, அவருக்கு பரிசுப் பொருட்களை அளிக்கும் புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.