ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ஆட்டோ சங்கர், ஃபிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ உள்ளிட்ட திரைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
தற்போது ஜீ5 அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் "விலங்கு" என்ற ஒரிஜினல் வெப் சீரிஸை வெளியிடவுள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரிக்க, அஜீஷ் இசையமைத்துள்ளார். விமல் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் பிப்.18ஆம் தேதி வெளியாகிறது.
குற்றப் புலனாய்வு பின்னணியில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸ் 7 அத்தியாயங்களை கொண்டது. இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் பரிதி எனும் பாத்திரத்தில் விமல் நடித்துள்ளார்.
இந்தக் கதை எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது.
ஒரு மர்மமான வழக்கை விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதில் ஏற்படும் திருப்பங்களே இந்தத் தொடர். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், ஆர்என்ஆர் மனோகர், ரேஷ்மா உள்ளிடோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சாயம்' பட வெளியீடு; இயக்குநருக்கு மிரட்டல்!