ETV Bharat / sitara

த்ரில்லர் திரைக்கதையில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் 'டைகர்'? - விக்ரம் பிரபு லேட்டஸ்ட் நியூஸ்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டைகர் திரைப்படமானது த்ரில்லர் திரைக்கதையில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபுவின் 'டைகர்'
விக்ரம் பிரபுவின் 'டைகர்'
author img

By

Published : Feb 1, 2022, 8:20 PM IST

இயக்குநர் கார்த்தி - விக்ரம் பிரபு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'டைகர்'.

சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில், நடிகர் விக்ரம் பிரபு கிராமிய கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இயக்குநர் முத்தையா இத்திரைப்படத்திற்கு கதை, வசனங்களை எழுதுகிறார்.

இப்படத்தினை எம் ஸ்டுடியோஸ் நிறுவனமானது, ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கின்றது.

திரைப்படம் குறித்து இயக்குநர் கார்த்தி பேசுகையில், "இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும். பரபர த்ரில்லராக இருக்கும்.

ஒரு திரைக்கதை எழுத்தாளராக இயக்குநர் முத்தையாவின் பங்களிப்பு உணர்வுப்பூர்வமான மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

'வெள்ளக்கார துரை' திரைப்படத்தில் வெளியான அழகான கெமிஸ்ட்ரியைக் கருத்தில் கொண்டு விக்ரம் பிரபுவுடன், ஸ்ரீ திவ்யா ஜோடி சேர்கிறார். சக்தி வாசு வில்லனாக நடிக்க, அனந்திகா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்.' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.