ETV Bharat / sitara

விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு நிறைவு!

author img

By

Published : Feb 15, 2022, 6:41 PM IST

விக்ரம் நடிப்பில், ரஷ்யாவில் நடைபெற்றுவந்த கோப்ரா இறுதிகட்ட படப்பிடிப்புக் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு நிறைவு!
விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு நிறைவு!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படம் 'கோப்ரா'. ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் சஸ்பென்ஸ், சைக்காலஜிக்கல் த்ரில்லர் பட பாணியில் உருவாகியுள்ளது. விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளார்.

‘கேஜிஎஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் முக்கியக் காட்சி ஒன்று ரஷ்யாவில் படமாக்கப்பட வேண்டியிருந்தது.

கடந்த பிப்ரவரியின்போது விக்ரம், இர்ஃபான் பதான் என முக்கியமான ஆட்களோடு படக்குழு ரஷ்யா கிளம்பியது. பின்னர் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பாதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினர். தற்போது மறுபடியும் அங்கு சென்ற படக்குழு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: அசரவைக்கும் அழகுப்பதுமை அஞ்சனா ரங்கன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.