நடிகர் விஜய்சேதுபதி தற்போது இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் 'சங்கத்தமிழன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை (நவ.15) வெளியாக உள்ளது. இதனையடுத்து அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 'லாபம்' படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அவ்வப்போது பாலிவுட், டோலிவுட் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அப்படி ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
பாலிவுட், டோலிவுட் நடிகர், நடிகைகள் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பை, பார்வதி திருவோத்து, விஜய் தேவரகொண்டா, விஜய் சேதுபதி ஆகியோர் மீடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: