யதார்த்த சுபாவத்துடன் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், இயக்குநர் தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் உருவான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா கதாப்பாத்திரத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. தற்போது, சு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதனிடையே இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு வில்லனாக நடிக்க இருக்கிறார். விவசாயிகளின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரத்திர பகுதியில் நடைபெற்று வருகிறது.
மேலும், விஜய் சேதுபதி எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பொறம்போக்கு என்னும் பொதுவுடமை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.