ETV Bharat / sitara

வெளியானது 'மாஸ்டர்' - திரையரங்குகளில் திருவிழா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

விஜயின் மாஸ்டர்
விஜயின் மாஸ்டர்
author img

By

Published : Jan 13, 2021, 9:20 AM IST

Updated : Jan 13, 2021, 9:37 AM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகிய நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளிவரவேண்டிய இப்படம் கரோனா காரணமாக தற்போது பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள மாஸ்டர் படத்திற்கு அதிகாலை நான்கு மணிக்கே ரசிகர்கள் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

திரையரங்குகளில் மாஸ்டர் திருவிழா

சென்னை காசி திரையரங்கில் அதிகாலை முதலே குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் மேளதாளம் முழங்க ஆட்டம்போட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கரோனா காரணமாக திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. படத்திற்கு வருபவர்கள் முகக் கவசம் அணிந்து வந்துள்ளனரா என்பதை கண்காணித்து, அவர்களுக்கு சானிடைசர் அளித்து, உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே திரையரங்கினுள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், திரையரங்குகளை சுற்றிலும் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் உடன் சேர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சாந்தனு, இசை அமைப்பாளர் அனிருத், நடிகர்கள் ரமேஷ் திலக், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் படத்தை கண்டுகளித்தனர். படம் முடிந்து வெளியே வந்த லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி காவலர்கள் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தளபதி விஜய்யின் பொங்கல் ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை!

Last Updated : Jan 13, 2021, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.