ETV Bharat / sitara

மாணவரா அல்லது பேராசிரியரா? இணையத்தில் கசிந்த ‘மாஸ்டர்’ ஐடி கார்டால் நேர்ந்த குழப்பம்! - மாஸ்டர்

'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் ஐடி கார்ட் புகைப்படம் இணையத்தில் கசிந்து, ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கசிந்த மாஸ்டர் ஐடி கார்டால் நேர்ந்த குழப்பம்!

author img

By

Published : Mar 17, 2020, 5:19 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள லீலா பேலஸில் கோலாகலமாக நடைபெற்றது.

அதில் வழக்கம் போல் விஜய் தனது பாணியில் குட்டி ஸ்டோரி கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினர். மேலும் அடுத்த வாரம் ஞயிற்றுக்கிழமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். ட்ரெய்லரில் விஜய்யின் பெயர் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் ஐடி கார்டு இணையத்தில் கசிந்துள்ளது. அதில் விஜய்யின் பெயர் ஜான் துரைராஜ் என்றும் மாணவர்களின் டீன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் இதில் கல்லூரி பேராசிரியாக நாடித்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இணையத்தில் வெளியான ஐடி கார்டால் அவர் மாணவனாக நடித்துள்ளாரா அல்லது பேராசிரியராக நடித்துள்ளாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இணையத்தில் கசிந்த மாஸ்டர் ஐடி கார்டால் நேர்ந்த குழப்பம்!
இணையத்தில் கசிந்த மாஸ்டர் ஐடி கார்டால் நேர்ந்த குழப்பம்!

விஜய்யின் இந்த ஐடி கார்டு புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. முன்னதாக 'பிகில்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இதே போன்று 'மைக்கேல்' என்று குறிப்பிடப்பட்டப்பட்டிருந்த விஜய்யின் ஐடி கார்டு இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழில் சிறந்த நடிகையாக வலம் வருவதே லட்சியம் - மாலா பார்வதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.