ETV Bharat / sitara

'தலைவருக்கு அடுத்து தளபதி: விஜய் vs விஜய் சேதுபதி!'- ரத ரத ரத ரா! - லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay vs vijay sethupathi
author img

By

Published : Sep 27, 2019, 3:23 PM IST

‘விக்ரம் வேதா’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார். தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மட்டும் மனதில் கொண்டு, அவர் படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதில் விஜயுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 3ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. டிசம்பர் மாதம் விஜய் சேதுபதி இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:

கண்ணால் "விசில்" அடித்து ரசிகர்களைக் கவர்ந்த பிக் பாஸ் ஷெரின்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.