ETV Bharat / sitara

மூன்று இயக்குநர்களையும் ஒன்றாகப் படம் பிடித்த விஜய்: புகைப்படம் வைரல்! - vijay took photo of three directors

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் திலீப்குமார் ஆகிய மூவரும் இணைந்து செல்பி எடுத்துக்கொள்ளும் புகைப்படமொன்றை, நடிகர் விஜய் புகைப்படமெடுத்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/05-February-2022/14380262_vijayy.JPG

author img

By

Published : Feb 5, 2022, 4:20 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

கரோனா காலகட்டத்துக்குப் பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் திகழ்ந்தது. இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இதில் செல்வராகவன், யோகி பாபு, பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் ட்விட்
லோகேஷ் கனகராஜ் ட்வீட்

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லி, நெல்சன் ஆகியோருடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தை எடுத்தது விஜய் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். விஜய் எடுத்த இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கோவிட் தொற்று: பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.