சென்னை: பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலை நிறுவியுள்ளனர்.
நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் மன்றத்தை நிறுவி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். இந்நிலையில், இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு அவரது ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்தனர்.
விஜய்க்கு சிலை வைக்கப்பட்டதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்துக்கான பணிகளில் பிஸியாக இருக்கிறார். விரைவில் இதன் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேங்ஸ்டர் ஆகிறார் மாஸ்டர் மகேந்திரன்?