ETV Bharat / sitara

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டனங்கள்! - முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபருக்கு எதிராக சமூக வலை தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்

author img

By

Published : Oct 20, 2020, 11:22 AM IST

Updated : Oct 20, 2020, 12:12 PM IST

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழ் அமைப்புகளும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து சமூக தளங்களில் வெளியாகின.

இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், '800' படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதியை அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகும் அர்த்தத்தில் நன்றி.. வணக்கம் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்நிலையில் நேற்று (அக். 20) பீட்சா படம் வெளிவந்து எட்டாவது ஆண்டை நிறைவுபெற்ற நிலையில், அது குறித்து விஜய் சேதுபதி தனது நினைவுகளைப் பகிர்ந்திருந்தார்.

அதில் கமெண்ட் செய்த @ItsRithikRajh என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து நபர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து பதிவிட்டிருந்தார். இதற்கு தற்போது சமூக வலை தளத்தில் கடும் கண்டனம் எழுந்துவருகிறது. அதுமட்டுமின்றி @ItsRithikRajh என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை எழுந்து வருகிறது.

இதையும் படிங்க....'800' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்

Last Updated : Oct 20, 2020, 12:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.