பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிவந்தவர் லோகேஷ் பாபு. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். இவருக்கு சில நாள்களுக்கு முன்பு திடீரென ஸ்டோக் ஏற்பட்டது.
இதனால் அவரது இடக்கால், இடக்கை செயலிழந்துவிட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்காக நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நேற்று லோகேஷ் பாபுவை நேரில் சந்தித்து அவரது மருத்துவச் செலவுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட காணொலி, புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: டீலா... நோ டீலா: மிஷ்கின் கூறிய நிபந்தனைகள்: கடுப்பான விஷால்