ETV Bharat / sitara

5ஆவது முறையாக பிரபல இயக்குநருடன் கூட்டணி அமைத்த மக்கள் செல்வன்

author img

By

Published : Jun 16, 2021, 10:35 AM IST

Updated : Jun 16, 2021, 10:42 AM IST

நடிகர் விஜய் சேதுபதி 5ஆவது முறையாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

’தென்மேற்குப் பருவக்காற்று’ படம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. இப்படம் தேசிய விருது வென்ற நிலையில், ‘இடம் பொருள் ஏவல்’, ’தர்மதுரை’, ‘மாமனிதன்’ எனத் தொடர்ச்சியாக சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் படங்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது 5ஆவது முறையாக சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனு ராமசாமி- விஜய் சேதுபதி
சீனு ராமசாமி-விஜய் சேதுபதி

மேலும் இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ‘மாஸ்டர்’ படம் வெளியான நிலையில், கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

இதையும் படிங்க: 'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' - மகளுடன் நடந்துசெல்லும் யுவன்

Last Updated : Jun 16, 2021, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.