சங்கத்தமிழன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.
சமீபத்தில், தான் நேரத்தை கழிக்க விரும்பும் நடிகர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்டு, அந்த காரணத்தையும் விளக்கியுள்ளார் விஜய் சேதுபதி. தனது முதல் ஆப்ஷனாக நடிகர் திலகம் சிவாஜி கணேஷனைக் கூறிய சேதுபதி, அவர் எந்த கதாபாத்திரத்தையும் செய்யக்கூடியவர் என்று தெரிவித்தார். அதன் பின்னர் கமல்ஹாசனை விருப்ப நாயகனாக கூறியவர், அவர் சிறந்த நடிகர் என்று கூறினார்.
மூன்றாவதாக நடிகர் மோகன்லாலை குறிப்பிட்டு, அவர் எந்த கதாபாத்திரத்தையும் எளிமையாக செய்து முடிப்பார் என்றார். மேலும் மக்கள் திலகம் எம். ஜி. ஆரையும் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, அவரிடம் கதை தேர்ந்தெடுக்கும் முறை பிடிக்கும் என்று கூறினார்.
தற்போது பாலிவுட்டில் ஆமிர் கானின் திரைப்படத்தில் தனது இந்தி வரவை பதிக்கப்போகிறார் மக்கள் செல்வன்.
இதையும் படிங்க: கௌதமுடன் மீண்டும் இணையும் இளம் இசையமைப்பாளர்