ETV Bharat / sitara

'தளபதி 65' வெளியீட்டுத் தேதி மாற்றம்...? - விஜய்யின் தளபதி 65

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

thalapathy
thalapathy
author img

By

Published : May 28, 2021, 9:32 PM IST

Updated : May 28, 2021, 9:48 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படத்தை இயக்கிய நெல்சன், அடுத்தாக நடிகர் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது. அதில் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

'தளபதி 65' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விஜய் நடிப்பில் ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னை அரங்கு அமைக்கும் பணி நடைப்பெற்றுவந்தது. இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை தீவிரத்தால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதன் காரணமாக 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். தற்போது படப்பிடிப்பு தாமதமாவதால், வெளியிட்டு தேதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பொங்கலுக்கு பதில் தமிழ்ப் புத்தாண்டுக்கு 'தளபதி 65' படத்தை வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : May 28, 2021, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.