கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விளிம்புநிலை மனிதர்கள் வருமானம் இன்றி வீட்டிலேயே தவித்து வருகின்றனர்.
அந்தவகையில் வருமானமின்றி தவித்து வந்தத் தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் புதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில் அத்தியாவசிய உணவு பொருள்களான அரிசி, மளிகை, காய்கறிகள் ஆகியவற்றை சுமார் 150 குடும்பத்திற்கு வழங்கியுள்ளனர்.
இதை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் தனது சொந்த செலவில் வழங்கினார். தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இதுபோன்ற சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ’வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பம் உண்டாக்க வேண்டாம்’ - ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள்