விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துவரும் அனன்யா பாண்டே, சார்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'லைகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இடையே நடைபெறும் குத்துச்சண்டை படமாக்கப்படுகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த மனிதர் அன்பானவர். இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். அதிலும் இந்த தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் மூலம் இந்திய சினிமாவில் மைக் டைசன் முதல்முறையாக இணைவதால், ரசிகர்களுக்கு படம் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.