’அர்ஜுன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம், தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர் விஜய் தேவரகொண்டா. குறிப்பாக இவருக்கு ரசிகைகள் பட்டாளமே இருக்கின்றன.

விஜய் தேவரகொண்டா 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இணைந்து மூன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது 13 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவிலேயே அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நடிகர்களில் நடிகர் அல்லு அர்ஜுன் முதலிடத்தில் உள்ளார். அவர் சமீபத்தில்தான் 13 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக விஜய் தேவரகொண்டா இருந்துவந்தார்.

அல்லு அர்ஜுன் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம்முதல் இன்ஸ்டாவில் இருந்துவருகிறார். அவருக்குப் பின்னர் இன்ஸ்டாவில் இணைந்து குறைந்த நாள்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று அல்லு அர்ஜுனுடன் சமமான ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

இதையும் படிங்க: 'OMG' சன்னி லியோன் - வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் 90'ஸ் கிட்ஸ்!