சென்னை: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பன்மொழித் திரைப்படமாக உருவாகி லிகர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் லிகர் படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கிறது. படத்துக்கு ஒளிப்பதிவு - விஷ்ணு ஷர்மா.
தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.
படத்தில் கிக் பாக்ஸராக தோன்றவுள்ளார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தில் யாருக்கும் அடங்காதவராகவும், பெண்ணை உருகி காதலிப்பராகவும் தோன்றி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் விஜய் தேவரகொண்டா.
அந்தப் படம் பெற்ற மாபெரும் வெற்றியால் அர்ஜுன் ரெட்டி படத்தில் தோன்றிய கதாபாத்திரம் போன்றே, முரட்டுத்தனமும், காதலும் கலந்த கேரக்டராகவே தனது அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இவர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட வரவேற்பினால் மற்ற தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் டப் செய்து வெளியிட்டு கல்லா கட்டினார்.
இதைத்தொடர்ந்து தற்போது அதே போன்றதொரு கதாபாத்திரத்திரம் மூலம் தற்போது நேரடியாக இந்தி சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஹீரோவானார் மிரட்டல் வில்லன் அர்ஜுன் தாஸ்