'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்கிய முதல் படமே 100 கோடி வசூல், பிரமாண்ட வெற்றி பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றியை ஈட்டித்தந்தது. விஜய் ஒரே மாதிரியான கதைகளத்தில் நடித்துவந்த நிலையில் இப்படம் நல்ல பிரேக் கொடுத்தது.
இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் விஜய்யை வேறுவிதமாக ரசிக்க வைத்தன. 'தெறி' வெற்றிக்குப் பிறகு விஜய் -அட்லி வெற்றிக் கூட்டணியுடன் 'மெர்சல்' படம் வெளியானது. இப்படம் வெளியான முதல்நாளே கடும் விமர்சனத்தை சந்தித்தது. ஜிஎஸ்டி குறித்த காட்சிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. விஜய்யை வைத்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 'பிகில்' படத்தை இயக்கி முடித்துள்ளார் அட்லி.
-
Happy happy birthday to you @Atlee_dir 👏🏻👏🏻🥳🎉🎉 may this year be your Bigggggilest , bestestest & most successful year 🎂 stay blessed #GodblessYou
— Vignesh Shivan (@VigneshShivN) September 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wishing the best for #Bigil & everything that’s aligned to follow ! Jus Keep rocking 😇🎂🎂🎉🎉 @priyaatlee pic.twitter.com/GHDsPDNOBr
">Happy happy birthday to you @Atlee_dir 👏🏻👏🏻🥳🎉🎉 may this year be your Bigggggilest , bestestest & most successful year 🎂 stay blessed #GodblessYou
— Vignesh Shivan (@VigneshShivN) September 20, 2019
Wishing the best for #Bigil & everything that’s aligned to follow ! Jus Keep rocking 😇🎂🎂🎉🎉 @priyaatlee pic.twitter.com/GHDsPDNOBrHappy happy birthday to you @Atlee_dir 👏🏻👏🏻🥳🎉🎉 may this year be your Bigggggilest , bestestest & most successful year 🎂 stay blessed #GodblessYou
— Vignesh Shivan (@VigneshShivN) September 20, 2019
Wishing the best for #Bigil & everything that’s aligned to follow ! Jus Keep rocking 😇🎂🎂🎉🎉 @priyaatlee pic.twitter.com/GHDsPDNOBr
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நிறைவுற்று தீபாவளிக்கு திரைக்கு வர காத்திருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய அட்லி, தன்னை கறுப்பு என்று கேலி செய்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி இவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். திரையுலகினர் பலரும் இவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இதனிடையே அட்லி தனது மனைவி பிரியாவுடன் விக்னேஷ் சிவன் -நயன்தாரா காதல் ஜோடியை நேரில் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனது பிறந்தநாளை நயன், விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த இரண்டு ஜோடிகளும் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.