இன்று தனது 41ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை வித்யா பாலன். பிறந்தநாளை முன்னிட்டு தனது பிஸி வாழ்க்கையிலிருந்து சற்று விலகி ரசிகர்களுடன் நேரம் ஒதுக்க திட்டமிட்டு, தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.
பிறந்தநாளில் ஜொலிஜொலிக்கும் வண்ண ஆடையை அவர் உடுத்தியிருந்தார்.
தற்போது கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற சகுந்தலா தேவியுடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் வித்யா நடிக்கிறார். இந்ந ஆண்டு 'சகுந்தலா தேவி' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜோக்கர் இரண்டாம் பாகம் உருவாகுமா? விளக்கமளித்த டோட் பிலிப்ஸ்!