பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப் ஜோடி வரும் 9ஆம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில், 7ஆம் தேதிமுதல் 9ஆம் தேதிவரை திருமணம் நடைபெறவுள்ளது.
குறைவான நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாகவும், அவர்களுக்கும் ரகசிய குறியீடு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. தேவையற்ற சில விஷயங்களைத் தவிர்க்கவே இதுபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள், நண்பர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என இவர்கள் தடைவிதித்துள்ளனர். இவர்களின் திருமணப் புகைப்படங்களின் உரிமையை ஒரு பன்னாட்டுப் பத்திரிகைக்கு விற்பனை செய்ததால், இதுபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மகேஷ் பாபுவுக்கு என்ன ஆச்சு? - கவலையில் ரசிகர்கள்