ETV Bharat / sitara

அரசாங்கம் மக்கள் நலன்களை பாதுகாப்பதை விடுத்து கார்ப்பரேட்களுடன் இணையக்கூடாது - வெற்றிமாறன் - விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த வெற்றிமாறன்

ஆட்சி அதிகாரம் மக்களால் கொடுக்கப்படுகிறது. எனவே மக்களின் நலன்களை பாதுகாப்பதாக அவை இருக்க வேண்டுமே தவிர மாறாக கார்ப்பரேட்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படக் கூடாது என்று விவசாயிகள் போராட்டம் குறித்து கூறியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

director vetrimaran
இயக்குநர் வெற்றிமாறன்
author img

By

Published : Feb 5, 2021, 6:14 PM IST

சென்னை: ஜி.வி. பிரகாஷ், பா ரஞ்சித்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் விவசாயிகளுக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எந்த வகையிலும் கேட்காதவர்களிடம் காட்டும் எதிர்ப்பின் வெளிப்பாடுதான் போராட்டம். ஆட்சி அதிகாரம் அரசாங்கத்துக்கு மக்களால் கொடுக்கப்படுகிறது. எனவே மக்களின் நலன்களை பாதுகாப்பதாக அவை இருக்க வேண்டும். மாறாக கார்ப்பரேட்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படக் கூடாது.

விவசாயிகள் நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். எனவே அதற்கு ஆதரவு அளிப்பதே ஜனநாயகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளார். இவர்கள் வரிசையில் தற்போது வெற்றி மாறனும் இணைந்துள்ளார்.

தற்போது சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அண்மையில் திறக்கப்பட்ட ஸ்டூடியோவில் முதல் முறையாக இந்தப் படத்துக்கு இசைக் கோர்ப்பு பணிகளில் இளையராஜா ஈடுபடுகிறார்.

இதையும் படிங்க: 'டெனெட்' எனக்கு புரியவில்லை 'மாநாடு' ட்ரெய்லருக்காக காத்திருங்கள் - வெங்கட் பிரபு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.