'அசுரன்' படத்தின் மூலமாக பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன்.
அதன் பின்பு வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றப்போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்திற்கு தான் இசையமைப்பதாக ஜி.வி. பிரகாஷ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இப்படத்திற்கு 'வாடிவாசல்' என பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இது சிசு செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாகக் கொண்டு உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவலை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.