கொல்கத்தா: மாரடைப்பு காரணமாக பழம்பெரும் வங்காள நடிகர் மோனு முகர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 90.
மிர்னால் சென் இயக்கத்தில் உருவான ‘நில் ஆகாஷெர் நிச்சே’ படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் மோனு முகர்ஜி. சத்யஜித்ரேவின் ‘ஜாய் பாபா ஃபெலுநாத்’, ‘ஞானஷத்ரு’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்துவந்த மோனு, மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவு குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “மோனு முகர்ஜினியின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. டெலி சம்மான் விருதுகளில் (2015) அவர் வாழ்நாள் சாதனையாளர் பெற்றார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.